இடையமேலூர்
ஸ்ரீ லஸ்ரீ மாயாண்டி சித்தர்

ஆன்மீக சக்தி • அருள் • ஆசீர்வாதம்

தவத்திரு ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சித்தர் பற்றி

இடையமேலூர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சித்தர் அவர்கள் இந்த பூலோகத்தில் சுமார் 950 வருடங்கள் வாழ்ந்ததாக மகான்கள், சித்தர்கள் கூறுகிறார்கள். ஐயா அவர்களின் பிறப்பு, வளர்ப்பு பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. எப்படி ஈஸ்வரனுடைய அடிப்பாதமும், உச்சியும் பார்க்க முடியாமல் திருமாலும், நான்முகனும் திகைத்தார்களோ, அதேபோல மாயாண்டி சித்தர் பிறப்பு, வளர்ப்பு பற்றி யாரும் அறியவில்லை. ஆனால் மகான் மாயாண்டி சித்தர் இந்த பூலோகத்தில் 950 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்ததாக சதுரகிரி சித்தர், வெள்ளையங்கிரி, கொல்லிமலையில் வாழும் சித்தர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அறிய

கோயில் புகைப்படங்கள்

பூஜை நேரங்கள் & விசேஷ நிகழ்வுகள்

பூஜை நேரம்

  • 6.45 காலை பூஜை
  • 1.15 மதிய பூஜை
  • 7.15 இரவு பூஜை

கோயில் திறப்பு நேரம்

காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

விசேஷ பூஜைகள்

  • பௌர்ணமி பூஜை – மஹா அன்னதானம் மதியம் 1 மணி
  • 6.00 மணிக்கு விளக்கு பூஜை (சக்திமார்கள்)
  • அமாவாசை பூஜை – மஹா அன்னதானம் மதியம் 1 மணி
  • உத்திர நட்சத்திரம் சிறப்பு பூஜை – 1 மணி
  • பிரதோசம் – 4.30 முதல் 6.00 மணி
  • சிவராத்திரி – இரவு முழுவதும் 4 கால பூஜை
  • குருபூஜை – மார்கழி மாதம் 3 நாட்கள் அன்னதானம் மற்றும் விழாக்கள்